சமூக அறக்கட்டளை உருவாக்கும் அறம்
பெண்களிடையே தன்னிறைவு மற்றும் தன்னம்பிக்கையை உருவாக்க அறம் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை சார்பாக அறம் தொழிற்திறன் பயிற்சி மையம் என்ற பெயரில் இந்த தையல் பயிற்சி மையத்தை தொடங்கினோம்.. ஆடைகளைத் தைப்பது மனிதகுலத்தின் இறுதி வரை இருக்கும் ஒரு வேலை. மேலும், அடிப்படை தையல் திறன்கள் பெண்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்ய உதவுகின்றன.
பாடநெறி காலம் 3 மற்றும் 6 மாதங்கள் என பயிற்சி காலங்கள் நிர்ணயிக்கப்பட்டு அவர்களுக்கு துணிகளை வெடுதல், இணைத்தல் என அடிப்படை தையல் பயிற்சி முதல் விரிவான கலை மற்றும் படைப்பாற்றல் பயிற்சியில் முன்னேறும் வகையில் அவர்களுக்கு கற்று தரப்படுகிறது.
ஆரி எம்பிராயிடிங் என 70 வகையான தையல் கலைகளை கற்றுத்தறுகிறோம்..
மண்ணூர்பேட்டையில் 2017 ஆம் ஆண்டு சனவரி மாதம் 8 தையல் இயந்திரங்கள் மற்றும் 15 மாணவர்களுடன் தொடங்கப்பட்ட இந்த பயிற்சி மையம் தற்போது 25 தையல் இயந்திரங்களோடு 500 மேற்பட்ட பெண்ளுக்கு பயிற்சி அளித்து கொரட்டூர் பகுதியில் இயங்கி வருகிறது. தமிழகம் முழுவதும் கிராமப்புறங்களிலும் இதன் கிளைகளை விரிவடைவதற்கான முயற்சியில் ஈடுப்பட்டுள்ளது..