கடந்த 2015 டிசம்பரில் சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது அம்பத்தூர் அருகே உள்ள மண்ணூர்பேட்டை மற்றும் கொரட்டூர் பகுதி பெரிதும் பாதிக்கப்பட்டது, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 200 மேற்பட்ட நபர்கள் எங்கள் நண்பர்கள் குழாவல் தனியார் பள்ளியில் சுமார் 20 நாட்கள் வரை பாரமரிக்கப்பட்டனர். அவர்களில் பலர் எங்கள் பகுதியில் உள்ள ஆடை தொழிற்சாலைகளில் சொற்ப சம்பளத்திற்கு வேலை பார்த்து வந்தனர்.சரியாக தையல் கலை தெரியாத காரணத்தால் அவர்கள் சொற்ப சம்பளத்திலும், தையல் கலை தெரிந்தவர்கள் ஓரளவிற்கு நல்ல சம்பளத்தில் பணியாற்றியதை அறிந்தோம். மேலும் அங்கு இருந்த குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல் குடும்ப சூழல் காரணமாக வேலைக்கு செல்வதை அறிந்தோம்.. அது முதல் எங்களது பகுதியில் உள்ள பெண்களுக்கு தொழிற்பயிற்சியை அளிக்கவும் , குழந்தைகளுக்கு தேவையான கல்வி உதவிகளையும், அவர்களுக்கு தேவையான பயிற்சிகளை அளிக்க நண்பர்கள் ஒன்றிணைந்து திட்டமிட்டோம்..
அதன் தொடர்ச்சியாக ரோட்டரி கிளப் உதவியோடு அறம் தொழிற்திறன் பயிற்சி மையத்தை 2017 ஆம் ஆண்டு உருவாக்கினோம். மேலும் கல்வி கட்டணம் செலுத்த முடியாமல் தவித்த குழந்தைகளுக்கு கல்வி கட்டணங்களை செலுத்தினோம். அதற்காக அறம் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை என்ற அறக்கட்டளை தொடங்க திட்டமிட்டு அதற்கான பயணம் 2018 ஆம் ஆண்டில் தொடங்கியது மற்றும் 2021 ஆம் ஆண்டில் இந்திய அறக்கட்டளை சட்டத்தின் கீழ் சட்டப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டது.
கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் ஒரு அரசு சாரா அமைப்பாக இந்தியாவின் சென்னையை தலைமையிடமாகக் கொண்டு, அறம் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை இயங்கி வருகிறது. நமது சமூகத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் மக்களுக்கு தேவையான உதவிகளையும் வாழ்க்கை தரத்தை உயர்த்தி அவரது தேவைகளை நிவர்த்தி செய்ய நாங்கள் முயற்சி செய்கிறோம். பெண்களுக்கு தொழில் பயிற்சி மற்றும் மறுவாழ்வு சேவைகளை வழங்குவதன் மூலம் அவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த அவர்களுக்கு தேவையான பயிற்சி, ஊக்கத்தையும், வழிமுறைகளையும் வழங்கி அவர்களின் முன்னேற்றத்திற்கான படிக்கல்லாக அறம் அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது..
மருத்துவ முகாம் ஆரம்பத்திலிருந்தே அறம் அறக்கட்டளையின் செயல்பாடுகளில் ஒன்றாகும். சேவை மனப்பான்மை கொண்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர் குழுவைக் கண்டறிந்து, தேவைப்படும் இடத்தில் முகாம்களை நடத்துவது ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான மூக்கிய திட்டங்களில் ஒன்றாகும். இந்த முகாம்கள் குழந்தைகள், பெண்கள் மற்றும் பொதுமக்களுக்கு நடத்தப்படுகிறது. அறக்கட்டளை நிர்வாகிகளால் ஆயத்தப் பணிகள் முறையாக மேற்கொள்ளப்பட்டு, முகாம்களில் கலந்து கொள்வதற்காக துண்டுப் பிரசுரங்கள் முன்கூட்டியே விநியோகிக்கப்படுகின்றன. முகாமில் கலந்துகொள்ளும் மக்களுடன் தரமான நேரத்தை செலவிடக்கூடிய ஒரு நல்ல மருத்துவக் குழுவை அறம் அறக்கட்டளை அணுகுகிறது. சிறிய நோய்களுக்கு மக்களுக்கு மருந்துகள் பரிந்துரைக்கப்படுவதையும், தேவையின் அடிப்படையில், அறம் அறக்கட்டளை அறுவை சிகிச்சையையும் ஏற்பாடு செய்கிறது மற்றும் முழுச் செலவுகளையும் அறக்கட்டளையே ஏற்கிறது. எந்தவொரு ஏழை நோயாளிகளின் அவசர சேவைகளை செயல்படுத்த அறம் அறக்கட்டளையில் தன்னார்வலர்களை அர்ப்பணிப்போடு செயல்படுகின்றனர்..