அறம் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை
அறம் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை மற்றும் தென்னிந்திய பத்திரிகையாளர்கள் யூனியன் சார்பாக முப்பெரும் விழா நடத்த திட்டமிட்டுள்ளோம்..
பாடநெறி காலம் 3 மற்றும் 6 மாதங்கள் என பயிற்சி காலங்கள் நிர்ணயிக்கப்பட்டு அவர்களுக்கு துணிகளை வெடுதல், இணைத்தல் என அடிப்படை தையல் பயிற்சி முதல் விரிவான கலை மற்றும் படைப்பாற்றல் பயிற்சியில் முன்னேறும் வகையில் அவர்களுக்கு கற்று தரப்படுகிறது.
ஆரி எம்பிராயிடிங் என 70 வகையான தையல் கலைகளை கற்றுத்தறுகிறோம்..
மேலும் குழந்தைகளை மகிழ்விக்கும் வகையில் நடனம், மேஜிக் ஷோ, போன்ற கலை நிகழ்ச்சிகளையும் நடத்த திட்டமிட்டுள்ளோம்..
பத்திரிகையாளர்களின் குழந்தைகள் நலத்திட்டமும், பெண்கள் நலன் மேம்பாட்டு சிறப்பு நிகழ்ச்சியுமான இதில் தாங்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என நாங்கள் ஆசைப்படுகிறோம்.
முகாமில் கலந்துகொள்ளும் மக்களுடன் தரமான நேரத்தை செலவிடக்கூடிய ஒரு நல்ல மருத்துவக் குழுவை அறம் அறக்கட்டளை அணுகுகிறது. சிறிய நோய்களுக்கு மக்களுக்கு மருந்துகள் பரிந்துரைக்கப்படுவதையும், தேவையின் அடிப்படையில், அறம் அறக்கட்டளை அறுவை சிகிச்சையையும்.
அறம் அறக்கட்டளையில் தொழிற்பயிற்சி பயின்று வரும் பெண்களின் குழந்தைகள் மற்றும் திருவள்ளூர், வடசென்னை போன்ற பகுதிகளில் உள்ள பத்திரிகையாளர்களின் குழந்தைகளுக்கும் கல்வி உபகரணங்கள் வழங்குதல், அறம் தொழிற் திறன் பயிற்சி மையத்தில் பயின்ற பெண்களின் திறமையை ஊக்குவிக்கும் வகையில் அவர்களது கைவண்ணத்தில் உருவாக்கப்பட்ட எம்பிராயிடிங் மற்றுற் ஆரி வொர்கின் கண்காட்சி மற்றும் அறம் தொழிற் திறன் பயிற்சி மையம் தொடங்கி 5 ஆண்டுகள் முடிவுற்று ஆறாம் ஆண்டு துவங்ககியதை முன்னிட்டு அதில் பயின்ற பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் , அரசு சான்றிதழ்களையும் வழங்க உள்ளோம்.